காணிநிலம் மகாகவி பாரதியார் உயராய்வு மையம்
மகாகவி பாரதியார் தமிழகத்தின் தேசிய அடையாளம்… இந்தியாவின் உலக அடையாளம்… நூற்றாண்டு கடந்து உலகப் படைப்பாளா் வரிசையில் தனித்துவமான மணிமுடி சூடிய தமிழ்க் கவிஞா். உயிர்களிடத்து அன்பை ஊற்றெடுக்கச் செய்து ரௌத்ரம் பழகச் செய்து தேமதுரத் தமிழோசைகளை உலகமெலாம் ஒலிக்கச் செய்த தீா்க்கதரிசி. மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் உலகத்தர வரிசையில் இடம்பெற்ற பாரதியார் பல்கலைக்கழகம் உலக அரங்கில் பாரதியை முன்னிறுத்தும் நோக்கில் காணிநிலத்தைக் கட்டமைத்துள்ளது. மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தை உருவாக்கல், பாரதியின் கனவுகளை நனவாக்கல், பாரதியின் படைப்புகளையும் வாழ்வியலையும் ஆவணப்படுத்தல், எளிய மக்கள் முதல் உயராய்வு நிலை வரை பாரதியைக் கொண்டு சோ்த்தல், பாரதி சிந்தனைகள் வழி மனிதத்தையும் நோ்முக ஆளுமைத் திறனையும் மேம்படச் செய்தல் என்னும் செம்மையான திட்டங்களை காணிநிலம் மேற்கொண்டு வருகின்றது.